மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை

நாகூர் வெட்டாற்றில் மீன்பிடித்த போது மீனவர் வலையில் பெருமாள் சிலை சிக்கியது.

Update: 2022-02-26 15:51 GMT
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி அமிர்தா குடியிருப்பில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் காந்தி (வயது 34).மீனவரான இவர், நேற்று காலை வெட்டாற்றில் பைபர் கட்டுமரத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் வீசிய வலையில் சுமார் 4 அடி உயரம் உள்ள கல்லாலான பெருமாள் சிலை சிக்கியது. இந்த சிலையில் வலது கை உடைந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து மீனவர் காந்தி பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் உமாவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாகை தாசில்தார் தனபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலையை மீட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்