கோவை வஉசி பூங்காவில் 635 உயிரினங்கள் உள்ளது வனத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கோவை வஉசி பூங்காவில் 635 உயிரினங்கள் உள்ளது வனத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-02-26 14:45 GMT

கோவை

கோவை வ.உ.சி. பூங்காவில் 635 உயிரினங்கள் உள்ளது வனத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வ.உ.சி. பூங்கா

கோவை மாநகரில் வ.உ.சி. உயிரியல் பூங்கா கடந்த 1965-ம் ஆண்டு 4.5 ஏக்கரில் தொடங்கப்பட்டது. 

இங்கு ஆரம்பத்தில் சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்குகள், பாம்புகள் உள்பட பல்வேறு வகை உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. 

இங்கு மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தனர். 

அவர்கள், பூங்காவில் பராமரிக்கப் பட்டு வந்த சிங்கம், புலி, கரடி போன்ற ஆபத்தான விலங்குகளை வண் டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். 

அதன்படி அந்த விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கணக்கெடுப்பு

மேலும் கோவை வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்து வன விலங்கு கள் வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

அதன்பேரில் வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்தனர். 

ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்பட வில்லை. இதற்கிடையே வ.உ.சி. பூங்காவின் அங்கீகாரத்தை வன உயிரின ஆணைய அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால் பூங்கா மூடப்பட்டது.

இந்த நிலையில் வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கோவை கோட்ட வன அதிகாரிகளுக்கு, வன உயிரின ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து கோவை வனச்சரகர் அருண் தலைமையில் ஊழியர்கள் கோவை வ.உ.சி. பூங்காவில் உள்ள வன விலங்குகள் உள்பட உயிரினங்கள் குறித்து கணக்கெடுத்தனர்.

635 உயிரினங்கள்

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது

வன உயிரின ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் வ.உ.சி. பூங்காவில் பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டது. 

இதில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்து. இது குறித்த அறிக்கை சென்னை வன உயிரின ஆணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

வ.உ.சி. பூங்காவை வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்