திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக தொழிலாளி தர்ணா

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-02-26 13:44 GMT
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 30). கூலித்தொழிலாளி. இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பதினருடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் யாரும் எதிர்பாராத வண்ணம் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்த அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர்.

 பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சமாதானம் அடைந்த கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடு திரும்பினார்.

மேலும் செய்திகள்