எர்த்தாங்கல், பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடந்த விழாவில் 150 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின
எர்த்தாங்கல், பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் 270 காளைகள் சீறிப்பாய்ந்து ஓனை். மாடுகள் முட்டியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது
குடியாத்தம்
எர்த்தாங்கல், பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் 270 காளைகள் சீறிப்பாய்ந்து ஓனை். மாடுகள் முட்டியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காளை விடும் விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 48-ஆம் ஆண்டாக காளை விடும் விழா நடைபெற்றது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகள் ஓடுவதை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.
விழாக்கு ஊர் பெருந்தனகாரரும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கே.கே.வி.அருண்முரளி, ஊர் கவுண்டர் ஜி.ராமன், ஊர் நாட்டாமை ஏ.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதனை குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்தன
அதன்பின்காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டதில் அவை சீறிப்பாய்ந்து ஓடின. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்து ஆரவாரப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், எர்த்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் அம்முநெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காளைகள் முட்டியதில் 12பேர் சிறு காயமடைந்தனர் அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
வெற்றி பெற்ற 59 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கணபதி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாலாத்துவண்ணான்
கணியம்பாடி அருகே பாலாத்துவண்ணான் கிராமத்திலும் எருது விடும் விழா நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் தங்கம்மாள், ஊராட்சி மன்ற துணை தலைவர் சாந்தி துரைகண்ணு, வருவாய் ஆய்வாளர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 120 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் இதனை பார்த்தனர். மாடுகள் முட்டியதில் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
============