தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது

தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Update: 2022-02-26 11:34 GMT
சென்னை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட தண்டையார்ப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் அத்துமீறி புகுந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர், தி.மு.க. பிரமுகரான நரேஷ் என்பவரை அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தாக்கப்பட்ட நரேஷ் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பரமேஸ்வரன்(வயது 38) தண்டையார்பேட்டையில் சேர்ந்த டில்லி ராஜ்(36) ஆகிய இருவரை தண்டையார்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்