சுரண்டை:
சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பேச்சியம்மாள் (வயது 26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பேச்சியம்மாள் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் காலையில் பாலமுருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரத்த சோகையினால் அவதிப்பட்ட பேச்சியம்மாளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வந்த பாலமுருகன் தனது மனைவி மயங்கி கிடப்பதை கண்டு துடித்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.