கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்
முக்கூடல்:
முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் பூமிகாவலப்பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் பூசாரி பூஜை செய்ய சென்றார். அங்கு கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக சிங்கம்பாறையை சேர்ந்த சவுந்தர் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தார்.