நெல்லை சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
நெல்லை சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
நெல்லை :
நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் சுப்புகுட்டி. இவருடைய மகன் முகேஷ் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் மற்றொரு கட்டிட தொழிலாளி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த தொழிலாளியின் தங்கையான 16 வயது சிறுமிக்கும், முகேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது முகேஷ் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சிறுமிக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகேசை கைது செய்தனர்.