காரிமங்கலம் அருகே சத்துணவு அமைப்பாளர் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை முயற்சி வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு

காரிமங்கலம் அருகே சத்துணவு அமைப்பாளர் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை முயன்ற சம்பவம் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-25 21:24 GMT
காரிமங்கலம், பிப்.26-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொர்ணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் அதேபேகுதியை சேர்ந்த கிரிஜா (வயது35) சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை குறைவாக உள்ளதாக அமைப்பாளர் கிரிஜா மற்றும் ஆசிரியர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிரிஜா பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு அறை கதவை பூட்டிக்கொண்டு  தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அவர் வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி விரைந்து சென்று சத்துணவு அமைப்பாளர் கிரிஜாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர்  தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்