தக்கலை அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-25 21:07 GMT
தக்கலை, 
தக்கலை அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு, கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 45), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால், அழகியமண்டபம் அடுத்த பிலாங்காலையில் வாடகை வீட்டில் தனது தாயார் சுகுமாரியுடன் வசித்து வந்தார். மேலும், அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் சுகுமாரி தனது மகளை பார்ப்பதற்காக பெங்களூருவிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த விபின் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்