சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
புதுக்கோட்டை
விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குழந்தைவேலு (வயது 46) என்பவரை விராலிமலை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் குழந்தைவேலு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததன்பேரில் கலெக்டா் கவிதாராமு, குழந்தைவேலு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதற்கான நகலில் அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.