வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் நூதன மோசடி

வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது

Update: 2022-02-25 20:28 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா(வயது 31). டிராக்டர் ஒன்றை குறைந்த விலைக்கு விற்பதாக முகநூலில் பதிவிடப்பட்ட விளம்பரத்தை இவர் பார்த்தார். அதில், கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட்ட டிராக்டரை 2-ம் விற்பனைக்காக ரூ.1½ லட்சத்திற்கு விற்பதாக மர்மநபர் கூறியிருக்கிறார். 
இதற்காக முத்தையா, பல்வேறு தவணைகளாக மர்மநபர் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 997 வரை செலுத்தியிருக்கிறார். இருப்பினும் மேலும் பணம் கேட்டதால் முத்தையா சந்தேகமடைந்தார். அந்த மர்ம நபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் முத்தையா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மர்மநபரின் வங்கி கணக்கு எண் அரியானா மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று சமூகவலைத்தளங்களில் பணம் அனுப்பி யாரும் ஏமாற வேண்டாம், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்