கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நீரூற்று, ஊஞ்சல் மற்றும் சிறுவர்கள் விளையாடக்கூடிய உபகரணங்களை பார்வையிட்டதுடன் அங்கு மக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது
தஞ்சை மாநகரில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும், உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் திகழும் தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்அடிப்படையில் நடைபாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, செடிகள், மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. செயற்கை நீரூற்று சரி செய்யப்பட்டு குழந்தைகளை கவரும் வண்ணம் புதுப்பொலிவுடன் ராஜராஜன் மண்டபம் திகழ்கிறது. இந்த மணிமண்டபத்திற்கு வரும் பொதுமக்கள் தூய்மையாகவும், பொழுதுபோக்கு சாதனங்களுக்கு எவ்வித சேதமில்லாமல் நல்லமுறையில் பராமரித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.