மாணவியின் சாதனை நிகழ்ச்சி

விருதுநகரில் நோபல் சாதனை நிகழ்ச்சிக்காக மாணவியின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-02-25 19:07 GMT
விருதுநகர்,
சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி தன்யஸ்ரீ (வயது 10) நோபல் சாதனை பதிவுக்காக விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இடுப்பில் வளையம் சுற்றி சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சியில் நோபல் சாதனை பதிவு நிறுவன நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர் மாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்