சாலை பணியாளர்கள் மீது கார் மோதல்; ஒருவர் பலி

விருதுநகர் அருகே சாலை பணியாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-02-25 18:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே சாலை பணியாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
கார் மோதியது 
விருதுநகர் - சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பட்டம்புதூர் விலக்கு அருகே சிவந்திப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது38), புலிப்பாறைப்பட்டியை சேர்ந்த சரவணன் (50), சாத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (32), மோகன்குமார் (30) ஆகிய 4 பேரும் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  
அப்போது சாத்தூரை சேர்ந்த வன்னியராஜன் என்பவர் மதுரையில் இருந்து சாத்தூருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். எதிர்பாராதவிதமாக வன்னியராஜன் வந்த கார் சாலை பணியாளர்கள் மீது மோதியது. 
ஒருவர் பலி 
இதில் கருப்பசாமி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இ்ந்தநிலையில் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வன்னியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்