இளம் பெண் மர்ம சாவு

மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-02-25 17:58 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம் பெண் மர்ம சாவு
மயிலாடுதுறை அருகே நீடூர் பாவாநகர் ரெயில்வே கேட்  பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட சோதனையில் அந்த இளம்பெண் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. மேலும் நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
தற்கொலை செய்து கொண்டாரா?
இதுதொடர்பாக நீடூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
நீலநிற சுடிதாரும்,ரோஸ் கலர் பேண்ட்டும், அதே கலரில் ஷாலும் அணிந்திருந்தார். அந்த பெண் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் 94420 03309, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் 63804 18985 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்