1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கமுதி,
கமுதி அருகே வேடங்கூட்டம் கிராமத்தை சேர்ந்த சபரி ராஜா என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி உள்ளதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் துணை சூப்பி ரண்டு உத்தரவின் பேரில் கமுதி குற்றப்பிரிவு மற்றும் தனிப் பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 1,100 கிலோ புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப ்பட்ட கார் ஆகிய அனைத்தையும் பறிமுதல் செய்து கோவி லாங்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். சபரி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.