திருமணமான 4 மாதத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பள்ளிபாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-25 17:51 GMT
பள்ளிபாளையம்:
தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி வசந்தநகரை சேர்ந்தவர் சின்ராசு (வயது 32). இவருடைய மனைவி மணிமேகலை (20). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. 2 பேரும் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் சின்ராசு கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் சின்ராசு வீட்டில் திடீரென விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சின்ராசு இறந்தார். இதுகுறித்து மணிமேகலை பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். 
இதையடுத்து போலீசார் சின்ராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்