நர்சை கடத்தி பாலியல் பலாத்காரம்; தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது

நாமக்கல்லில் நர்சை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-25 17:51 GMT
நாமக்கல்:
நர்சு கடத்தல்
நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 17 வயது சிறுமி பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாலிபர் ஒருவர் கடத்தி சென்றார். இதுகுறித்து நர்சின் பெற்றோர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர். மேலும் அவரை கண்டுபிடித்து தரக்கோரி கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். 
நர்சு கடத்தல் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தனியார் நிதி நிறுவன கலெக்‌ஷன் ஏஜெண்டான கரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 44) கடத்தி சென்றது தெரியவந்தது.
நிதி நிறுவன ஊழியர் கைது
மேலும் நர்சை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நாகநல்லூரில் இருந்த அருண்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்