வேலூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
வேலூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.;
வேலூர்
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று மாலை சுருட்டுக்காத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். அப்போது அவர் கீழே இறங்க மறுத்தார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து வேலூர் வடக்கு போலீசாருக்கும், வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி அவரை கயிறு மூலம் கீழே பாதுகாப்பாக இறங்கினர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.