தூத்துக்குடி அருகே பேக்கரியில் திடீர் தீ

தூத்துக்குடி அருகே பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2022-02-25 22:54 IST
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகேயுள்ள ஸ்பிக்நகர்   பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த கடையின் உள்ளே இருந்து புகைமூட்டம் வெளியே வந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடை உரிமையாளர் பாலன் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையினுள் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 

இதுகுறித்து உடனடியாக தெர்மல் நகர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.




மேலும் செய்திகள்