ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-25 17:21 GMT
வெளிப்பாளையம்:
நாகையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜோதிமணி வரவேற்றார். மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா கலந்து கொண்டு பேசினார். 
ஊரக வளர்ச்சித் துறையில் வளர்ச்சி திட்ட பணிகளை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும்.  பிற துறை பணிகளை செய்ய நிர்பந்திக்க கூடாது. 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு உடனுக்குடன் நிதி வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் போதுமான ஊழியர் கட்டமைப்பினை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்