வாலாஜாவில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வாலாஜாவில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48), நெசவு தொழிலாளி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் நாகராஜ் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.