ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது
வருசநாடு அருகே ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடமலைக்குண்டு:
வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று கீழபூசணூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழபூசணூத்து அருகே அல்லால் ஓடையில், அதே கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் (வயது 29) என்பவரை அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அடைக்கலத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.