தினத்தந்தி புகார் பெட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-02-25 15:16 GMT
சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் காஞ்சிவாய் கிராமம் நல்லாவூரில் இருந்து கும்பகோணம் மற்றும் காரைக்கால் செல்லும் சாலை மிகவும் குண்டும்,  குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையில் வயதானவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்.

மேலும் செய்திகள்