மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன

திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Update: 2022-02-25 14:38 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 19-ந்தேதி மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவானது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் போலீசார் 
அதனை தொடர்ந்து 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் இருந்து மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்களை வாகனங்களில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுபாப்புடன் மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு 3-வது தளத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
---

மேலும் செய்திகள்