துணை தாசில்தார் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி வருவாய் துறை அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

துணை தாசில்தார் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி வருவாய் துறை அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-02-25 14:27 GMT

கோவை

துணை தாசில்தார் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி வருவாய் துறை அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுப்பு எடுத்து போராட்டம்

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில் தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், 


வருவாய் துறை ஊழியர்களுக்கு தேவையின்றி மெமோ வழங்குவதை கண்டித்தும் வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார் பில் 

கோவையில் மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களில் உள்ள தாசில்தார்கள், 

துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர்.


இதையடுத்து கோவை கலெக்டர் அலுவலக வருவாய் துறை அலுவலர் கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

இதனால் அரசின் பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் கொடுக்க வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த துணை தாசில்தார் மீது அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

கோவை அரசு விருந்தினர் விடுதியில் தங்கும் பிரமுகர்களின் செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தேவையின்றி அலுவ லர்களுக்கு மெமோ கொடுக்க கூடாது. கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்