மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

சோளிங்கரில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்

Update: 2022-02-25 13:29 GMT
சோளிங்கர்

சோளிங்கரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

முகாமில் சோளிங்கர்  வட்டத்திற்கு உட்பட்ட 261 பேர் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் 45 பேருக்கு மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக அவர்களுக்கான அடையாள அட்டை தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் 103 மனு உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பரிசீலனை செய்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்க உள்ளனர்.  பராமரிப்பு நிதி உதவி 1,500 கேட்டு 37 பேரும், மருத்துவ காப்பீடு வேண்டி 193 பேரும், அரசு வழங்கும் இலவச வீடு வேண்டி 19 பேரும், வேலைவாய்ப்பு வேண்டி 23 பேரும், வங்கி கடன் வேண்டி 9 பேரும் மனு கொடுத்துள்ளனர். 

மனுக்கள் மீது பரிசீலனை செய்து உடனடியாக முகாமிலேயே ஏழு பேருக்கு அடையாள அட்டை மற்றும் ஒருவருக்கு ஊன்றுகோல் ஆகியவற்ற கலெக்டர் வழங்கினார். 

மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்