3 புதிய ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 3 புதிய ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு
திருப்பத்தூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சிட்லபாக்கத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஆம்புலன்ஸ் வழங்கினார்.
அதில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் ஏற்கனவே 20 ஆம்புலன்ஸ் உள்ளது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள் புதூர்நாடு, நாயக்கனேரி மலைகிரமத்திற்கும், மின்னூர் கிராமத்திற்கும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது.
நிழ்ச்சியில் விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மதன் என்பவரின் தந்தை சின்னதம்பி, தாய் செந்தாமரை ஆகியோரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை கலெக்டர் வழங்கினார்.
108 அவசர சேவை மாவட்ட மேலாளர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுமோகன், 108 அவசர சேவை மருத்துவர்கள், ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.