நாளை மற்றும் நாளை மறுதினம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து, சென்னையில் மீண்டும் வழக்கம்போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வார நாட்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 202 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.;

Update: 2022-02-25 08:40 GMT
இந்நிலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக 27-ந் தேதி மட்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படும். மேலும், அன்று பூங்கா - செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே காலை 4.20 மணி முதல் இரவு 11.20 மணி வரை 61 மின்சார ரெயில் சேவைகளும், திருமால்பூர், செங்கல்பட்டு - பூங்கா இடையே காலை 3.55 மணி முதல் இரவு 11.55 மணி வரை 62 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.

* சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.10 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25, 11.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி(நாளை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 26-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 9.40 மணி, வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 27-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்