தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை;
தென்காசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 28 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.