பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 249 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பெரம்பலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 19 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 15 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 போ் திருச்சி, பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.