மின்சாரம் தாக்கி சிறுமி சாவு: புரோட்டா கடைக்காரருக்கு ஒரு ஆண்டு ஜெயில்
புரோட்டா கடைக்காரருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை;
நெல்லை:
நெல்லை பேட்டை உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் மாரியம்மாள் (வயது 12). இவள் கடந்த 2009-ம் ஆண்டு அங்குள்ள ஒரு கடைக்கு புரோட்டா வாங்க சென்றாள். அப்போது அங்கு மின்சாரம் தாக்கியதில் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புரோட்டா கடை உரிமையாளர் தாகா (50) என்பவரை கைது செய்து அவர் மீது நெல்லை 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்ரேட்டு விஜயலட்சுமி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட தாகாவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.