விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ் விவசாய சங்கத்தினர் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் 2020-2021-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையினை பட்டுவாடா செய்ய கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு வாரத்தில் 40 ஆயிரம் விவசாயிகளுக்கும் மக்காச்சோள பயிர் காப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.