மருந்துக்கடை உரிமையாளர், உதவியாளர் கைது

ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த வழக்கில் மருந்துக் கடை உரிமையாளர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-24 19:00 GMT
ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் கீழ்ப்பாடி கிராமத்தில் மதுரை மாவட்டம் மேலூர் ஆலம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி (வயது 40) என்பவர் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த மருந்துக்கடைக்கு நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (25) என்பவர் சென்று, தனது 5 மாத கருவை கலைத்தார். அப்போது, செல்விக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருந்துக்கடை உரிமையாளர் முத்துக்குமாரி, அவரது உதவியாளர் தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் மனைவி கவிதா (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் சட்டத்தை மீறி கருக்கலைப்பு செய்தது தொடர்பாக அந்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்