அஷ்டமி வழிபாடு

வடுக பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2022-02-24 18:52 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வடுக பைரவருக்கு 21 வகையான பால், பழம், பன்னீர், புஷ்பம்  கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரவி குருக்கள் தலைமையில் வடுக பைரவருக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்