கயிறு தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து

கயிறு தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து

Update: 2022-02-24 17:58 GMT
தளவாய்புரம்
தளவாய்புரம் அருகே முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் தவமணி(வயது 37). இவருக்கு சொந்தமான தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அசையா மணி ரோட்டில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே இதுபற்றி ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கயிறு தயாரிக்கும் மூலப் பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்