தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-02-24 17:40 GMT
திண்டுக்கல்:


புதர்மண்டி கிடக்கும் கிணறு
தேனி அல்லிநகரம் 11-வது வார்டில் உள்ள கிணறு கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த கிணற்றை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் கிணறு தண்ணீர் இன்றி வறண்டு போனது. எனவே கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது அதனை முழுமையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், அல்லிநகரம்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்
பழனியை அடுத்த மானூர் நடுத்தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த பல மாதங்களாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்குமார், மானூர்.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கம், கஸ்தூரி நாயக்கன்பட்டி.

சேதமடைந்த நிலையில் மின்கம்பம்
சின்னமனூரை அடுத்த அப்பிப்பட்டி அருகே அழகாபுரி கிராமத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, அப்பிப்பட்டி.


மேலும் செய்திகள்