வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 35), மெக்கானிக். இவருக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.