குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தேனியில் நாளையும், நாளை மறுநாளும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-24 16:52 GMT
தேனி, பிப்.25-
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான வைகை அணை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகருக்கு வரும் பிரதான குடிநீர் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பை சரி செய்யும் பணி  நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கவுள்ளது. இதனால், நகராட்சி பகுதிகளில்  நாளையும், நாளை மறுநாளும்  ஆகிய 2 நாட்கள் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்