உருட்டுக்கட்டையுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 ேபர் கைது
அரக்கோணத்தில் உருட்டுக்கட்டையுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 ேபர் கைது செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று பழனிபேட்டை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பழனிபேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் வாலிபர் ஒருவர் கையில் உருட்டுக்கட்டையை வைத்துக்கொண்டு அந்த வழியாக சென்றவர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் பிடித்து விசாரித்தார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) எனத் தெரிய வந்தது.
அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த கடா என்ற சந்திரகாந்த் (28) என்பவர் கையில் உருட்டுக்கட்டையை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தார்.
மேற்கண்ட இருவரையும் அரககோணம் டவுன் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.