வாணியம்பாடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

வாணியம்பாடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-24 15:51 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடிைய அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டப வளாகத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய ேவண்டும், ரூ.380 தினக்கூலி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரியத்தில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்