திருவாரூரில், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தகுதி உள்ள கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-02-24 15:31 GMT
திருவாரூர்:
தகுதி உள்ள கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
கொள்முதல் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஏற்றிய பின்பு தான் முழு கூலியும் என்பதை கைவிட்டு எடை வைப்பதற்கு மூட்டைக்கு ரூ.7, ஏற்றுவதற்கு ரூ.3 என பிரித்து உடனுக்குடன் வழங்க வேண்டும். கிடங்குகள் சேமிப்பு நிலையங்களில் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும். தகுதி உள்ள கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் 
அதன்படி திருவாரூர் விளமல் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் சிவானந்தம், சுப்பிரமணியன், கிருஷ்ணன், கலியபெருமாள், வேலாயுதம், சிவா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
---

மேலும் செய்திகள்