இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2022-02-24 13:55 GMT
கொலை

செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட்டு விட்டு, வந்த கே.கே.தெரு அ.தி.மு.க. பிரமுகர் மேகராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் மகேஷ்குமார் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்த வழக்கில் தினேஷ் மற்றும் மொய்தீன் இருவரும் ஆலப்பாக்கம் இருங்குன்றப்பள்ளி மலைப்பகுதியில் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலின்படி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது 2 போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதனால் தற்காப்புக்காக தினேஷ் மற்றும் மொய்தீனை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றபோது இருவரும் குண்டடிப்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர்.

குண்டர் சட்டத்தில்...

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக ஜெசிகா மற்றும் மாதவன் இருவரையும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் ஜெசிகா, மாதவன் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்