குட்டையில் மூழ்கி வியாபாரி சாவு

குட்டையில் மூழ்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-24 13:49 GMT
குட்டையில் மூழ்கி சாவு

காஞ்சீபுரம் தாயார் குளம் எம்.ஜி.ஆர். நகர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 44). பலூன் வியாபாரி.கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ராகவேந்திரா நகரில் உள்ள குட்டையில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்