கணவர் சமாதியில் சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்திய கவுன்சிலர்

வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் சமாதியில் கவுன்சிலர் சமீனா செல்வம் வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-02-24 12:35 GMT
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட 188-வது வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் என்பவர் கடந்த 1-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக இவரது மனைவி சமீனா செல்வம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டநிலையில், தி.மு.க. வேட்பாளர் சமீனா செல்வம் 7,256 வாக்குகள் பெற்று, 2,945 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற சான்றிதழுடன் மடிப்பாக்கத்தில் உள்ள தனது கணவர் செல்வம் சமாதிக்கு தொண்டர்களுடன் சமீனா செல்வம் சென்றார். அங்கு வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்