காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சொத்துக்கு வாடகை கொடுக்காதவர் மீது வழக்கு

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து கொண்டு வாடகை தராமல் இருந்து வந்தவர் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.;

Update:2022-02-24 17:33 IST
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் காமராஜர் சாலையில் உள்ளது. இந்த இடத்தின் முதல் தளத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி ரூ.10 லட்சம் வரை கொடுக்காமல் ராமமூர்த்தி (வயது 40) என்பவர் இருந்து வந்தார். பல முறை கேட்டும் கொடுக்காததால் அவர் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள ராமமூர்த்தியை தேடி வருகிறார். கோவிலுக்கு சொந்தமான இந்த சொத்தை மீட்டு பொது ஏலத்துக்கு கொண்டு வர முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்