போக்சோ சட்டத்தில் கைதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ சட்டத்தில் கைதான வாலிபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்தது.

Update: 2022-02-24 09:55 GMT
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியின் தாயார் கடந்த 2016-ம் ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 22) என்பவர் தனது மகளை கொடுமைப்படுத்தி கட்டாய பாலியல் உறவு கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கருணாகரனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசாருக்கு நீதிமன்றம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்