முதியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மதுரையில் முதியவர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-02-23 21:21 GMT
மதுரை,

மதுரை பெருங்குடி அருகே உள்ள வலையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 63). சம்பவத்தன்று, இவரும், அவரது மனைவியும்  மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து விட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 4½ பவுன் நகை, ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ராமு அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்