அண்ணா சிலைக்கு தி.மு.க. மரியாதை

ஓசூர் மாநகராட்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஓய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-02-23 21:03 GMT
ஓசூர்:-
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 21 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமையில் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்